துபாயில் இருந்து மங்களூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதன் கழிவறையில் இருந்து தலா ஒரு கிலோ மதிப்பிலான நான்கு தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1.22 கோடி ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமானத்தின் கழிவறையில் தங்க கட்டிகளை போட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.